பொத்து-தல் poddudal, செ.குன்றாவி. (v.t.)
1. புதைத்தல் (பிங்);
to bury.
‘மண்ணிடைக் கடிது பொத்துதல் (கம்பரா. விராதன்வதை 43);
2. வாய், கண், காது முதலியவற்றை மூடுதல்; to cover, close as the mouth, eyes of ears with the fingers orotherwise.
தன் செவித் தொளையிருகைகளாற் பொத்தி (கம்பரா இரணிய. 22);.
3. விரல் மடக்கி உள்ளங்கையை மூடுதல் (இ.வ.);
to close the fingers together.
4. தைத்து மூட்டுதல்; tc mend, patch, botch as baskets an bags.
5. தைத்தல்; to stitch.
இலையைப் பொத்திப்போடு.
6. மறைத்தல்; to hide conceal.
‘செம்பால் . கிளர்படி பொத்தின’ (கம்பராகரன்வதை.100);
7. அடித்தல்; to beal.
‘அவனை நன்றாய்ப் பொத்திவிட்டார்கள்”
8. தீ மூட்டுதல்,
to light as a fire.
கனையெரி, பொத்தி (மணிமே. 2,42);,
9. மாலை கட்டுதல்; to tie, string together, as a wreath.
‘மறுகண்ணியும் பொத்தி (ஈடு. 1, 3, 1);.
10. கற்பனை செய்தல்; to invent magine.
இல்லாத தெய்வம் பொத்தித்தம் ‘மயிர் பறிக்குஞ்சமணர் (தேவா. 65. 87);
பொத்து-தல் poddudal, செ.கு.வி. (v.t.)
1. கலத்தல்; to mix.
‘நெஞ்சம் பொத்தி (பு.வெ. 11, ஆண்பால், 4);
2. நிறைதல்,
to be filled.
‘வான்மேற் பொத்தினகுழு. (கம்பரா. கரன்வதை, 100);.
க.ம. பொத்து