பொது podu, பெ. (n.)
1. பொதுமையானது.
that which is common or shared by many, generality, opp to cirappu.
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் (குறள், 528);
2. சிறப்பின்மை; lack of distinction.
பொதுக் கொண்ட… வதுவை’ (கலித். 66);.
3. இயல்பானது; that which is ordinary or general ELa00.
‘பொதுவின் மண்ணுயிர்க் குலங்களும்’ (கம்பரா. வருணனை, 30);
4. வழக்கமானது; that which is usual or natural.
உரை பொதுவே (கம்பரா. முதற். 172);
5. நடுவுநிலை; neutrality.
அவன் எந்தப் பக்கத்திலும் சேராது பொதுவாயிருக்கிறான்’
6. ஒப்பு; likeness, equality.
ஒன்றொடு பொதுப்படா வுயர் புயத்தினான் (கம்பரா. நாகபாச. 75);
7. குறிப்பான பொருளின்மை, (கொ.வ.);
vagueness.
8. வெளிப்படையானது:
that which is public.
9. மன்று; public place, assembly.
பொதுவிற் றுங்கும் விசியுறு தண்ணுமை (புறநா. 89);
10. தில்லையம்பலம்; the hall in the temple at chidambaram.
‘கோலமார் தருப் பொதுவினில் வருகென (திருவாச 2, 128);
[ புது → பொது]
வே.க. (பக்.78);
ம. பொது, தெ.பொது (பொத்து);