பொது எழுத்து

ஆரிய உயிர் பதினாறனுள், நடுவிலிருக்கும் நான்குயிரும்கடையிலிருக்கும் இரண்டுயிரும் அல்லாத பத்துயிரும் ஆரியத்திற்கும்தமிழிற்கும் பொதுவெழுத்தாகும். இனி, ஆரிய மெய் முப்பத்தேழனுள்,ககரமுதல் ஐந்து வருக்கங்களின் முதலில் நிற்கின்ற க ச ட த ப-க்களும்,கடையில் நிற்கின்ற ங ஞ ண ந ம -க்களும், ய ர ல வ ள-க்களும் இருமைக்கும்பொது வெழுத்துக்களாம். (மு. வீ. மொழி. 11-13)