பொதுவியல்

பொதுவியல் poduviyal, பெ. (n.)

   1. பலவற்றிற்குப் பொதுவாகவுள்ள குணம் (சி.போ 1,4);; general attribute, common characteristics.

   2. உவமானவுவமேயங், களுக்குள்ள இயல்பான தன்மை;   3. பொதுவிலக்கண முணர்த்தும் நூற்பகுதி (நன்);; Section of grammar dealing with general principles.

   4. வேத்தியற்கு, வேறான கூத்துவகை (சிலப் 14, 148);,

 a dance, opp to vēttiyal.

     [பொது + இயல் ]