பொதும்பு

பொதும்பு podumbu, பெ. (n.)

   1. சோலை; grove.

     ‘காந்தளம் பொதும்பில் (அகநா. 18);

   2. குறுங்காடு; shrubbly jungle.

முல்லையம் பொதும்பின் (சீவக.3042);

   3. மரப்பொந்து(பிங்);; hole, hollow in a tree.

   4. குழி; pit.

பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி (திவ். பெரியாழ். 5.2.7);.

   5. குகை; cave.

மேருவின் பொதும்பில் (கம்பரா.மீட்சிப்.325);

     [பொது → பொதும்பு]

 பொதும்பு podumbu, பெ. (n.)

   மதுரை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Madurai Taluk.

     [பொது-பொதும்பு]