பொதுமொழி

பொதுமொழி podumoḻi, பெ.(n.)

   1. சிறப்பில்லாச் சொல்; word or speech not worthy of any regard, platitude.

     ‘ஏதின்மாக்கள் பொதுமொழி கொள்ளாது (புறநா.58);

   2. குறிப்பான பொருளில்லாத சொல்,

 indefinite speech, vague genetal expression.

   3. பொதுப் படையான சொல் (நன்);; term of general application.

   4. பிரியாது நின்ற விடத்து ஒரு பொருளும் பிரிந்தவிடத்து வேறு பொருளும் பயக்கும் சொல் (நன். 260);; a word dearing in a compound a meaning different from its ordinary sense.

   5. பொதுச்சொல்,’பார்க்க ‘பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளும் (கலித்: 68); (பிங்);

   6. பொதுச்சொல் பார்க்க;see podu-c-col பொதுமொழி படரின் (நன். 17);

     [பொது+ மொழி ]