இருபத்துநான்கு ஈற்றுச் சொற்களின் முன் வருமொழி முதல் ஞ ந ம ய வஎன்னும் மெய்கள் வரின் இயல்பாகப் புணரும். தனிக்குற்றெழுத்தை அடுத்தயகரமெய், தனியாக நிற்கும் உயிரும் உயிர்மெய்யுமாகிய ஐகாரம், நொ துஎன்ற உயிர்மெய் யெழுத்துக்கள் – இவற்று முன் ஞ ந ம ய வ – வரின், அம்மெய்கள் மிகுதலுமுண்டு. நிலைமொழி ஈற்றில் ண ள ன ல – என்ற மெய்கள்நிற்குமாயின், வருமொழி முதற் கணுள்ள நகரம் ணகரமாகவும் னகரமாகவும்திரியும்.எ-டு : விள ஞான்றது, விள நீண்டது, விள மாண்டது, விள யாது, விளவலிது;மெய்ஞானம், மெய்ஞ்ஞானம்; கைநீட்சி,கைந்நீட்சி;நொ நாகா, நொந் நாகா; து நாகா, துந் நாகா. (ஞெள்ளா, மாடா, யவனா -என்பவற்றையும் கூட்டி வரு மெய்யெழுத்து மிகுக்க.)மண், முள், பொன், கல்+நன்று = மண்ணன்று, முண்ணன்று, பொன்னன்று,கன்னன்று(நிலைமொழியீற்று ளகரம் ணகரமாகவும், லகரம் னகரமாக வும் திரியும்என்க.) (நன். 158)பொதுப்பெயர்களுக்கும் உயர்திணைப்பெயர்களுக்கும் ஈறான மெய்கள்வல்லின முதல் மொழி வருமிடத்தே இயல்பாம். உயிரும் யகர ரகரமெய்களும்ஆகிய இவ்வீற்று அவ்விருவகைப் பெயர்கள் முன்னர் வருமொழி முதற்கண் வரும்க ச த ப – என்னும் வல்லின மெய்கள் மிகா. உயர்திணைப் பெயர்கள் சிலநாற்கணங்களொடு புணருமிடத்தே நிலை வருமொழிகள் விகாரப்படுவனவும் உள.எ-டு : சாத்தன், ஆண் + குறியன், சிறியன், தீயன், பெரியன் =சாத்தன் குறியன், சாத்தன் சிறியன், சாத்தன் றீயன், சாத்தன்பெரியன்;ஆண் குறியன், ஆண் சிறியன், ஆண் டீயன், ஆண் பெரியன்; சாத்தன்,ஆண் + கை, செவி, தலை, புறம் = சாத்தன்கை, சாத்தன் செவி, சாத்தன்றலை,சாத்தன்புறம்; ஆண்கை, ஆண்செவி, ஆண்டலை, ஆண்புறம்.பொதுப்பெயர் அல்வழி வேற்றுமை இருவழியும் இயல்பாக முடிந்தன.ஊரன், அவன் + குறியன், சிறியன், தீயன், பெரியன் = ஊரன் குறியன்,ஊரன் சிறியன், ஊரன் றீயன், ஊரன் பெரியன்; அவன் குறியன், அவன் சிறியன்,அவன் றீயன், அவன் பெரியன்;ஊரன், அவன் + கை, செவி, தலை, புறம் = ஊரன்கை, செவி, தலை, புறம்;அவன் கை, செவி, தலை, புறம்.உயர்திணைப்பெயர் இருவழியும் இயல்பாக முடிந்தன.சாத்தி, தாய் +குறியள், சிறியள், தீயள், பெரியள்= சாத்திகுறியள், சாத்தி தீயள்….., தாய் குறியள், தாய் தீயள்…..சாத்தி, தாய் + கை, செவி, தலை புறம்= சாத்திகை, சாத்திசெவி,……….., தாய்கை, தாய்செவி,………….நம்பி, சேய் + குறியன், சிறியன், தீயன், பெரியன் = நம்பிகுறியன், நம்பி சிறியன்…, சேய் குறியன், சேய் சிறியன்,…..நம்பி + கை, செவி, தலை, புறம் = நம்பிகை, நம்பிசெவி…..,சேய்கை, சேய்செவி…..அவர், ஒருவர் + குறியர், சிறியர், தீயர், பெரியர் = அவர்குறியர், அவர் சிறியர்,…………., ஒருவர் குறியர், ஒருவர்சிறியர்,………… + கை, செவி, தலை, புறம்= அவர்கை,அவர்செவி,………., ஒருவர்கை, ஒருவர்செவி,………..உயிரும் யகர ரகர மெய்யும் ஆகிய ஈற்றுப் பொதுப்பெயர் களும்உயர்திணைப்பெயர்களும் அல்வழி வேற்றுமை என இருவழியிலும் இயல்பாகமுடிந்தன.விராடன் + அரசன் =விராடவரசன்; கபிலன் + பரணன் = கபிலபரணர்; வடுகன்+ நாதன்= வடுகநாதன்; அரசன் + வள்ளல் = அரசவள்ளல் – இவை அல்வழிப்புணர்ச்சி.ஆசீவகர் + பள்ளி = ஆசீவகப் பள்ளி; குமரன் + கோட்டம் = குமரகோட்டம், குமரக் கோட்டம் – இவை வேற்றுமைப் புணர்ச்சிஇருவழியும் உயர்திணைப்பெயர் விகாரப்பட்டது. நிலை மொழி ஈறு கெடுதல்காண்க. ஒரோவழி வருமொழி முதல் வல்லெழுத்து மிகுதலும் காண்க. வருமொழிமுதலெழுத்து மிகுதல் வருமொழிச் செய்கை எனப்படும். (நன். 159 சங்.)நிலைமொழி ஈற்றில் நிற்கும் ஆ ஏ ஓ – என்னும் வினா இடைச்சொல்முன்னரும், நிலைமொழியாக நிற்கும் யா என்னும் வினாப்பெயரின் முன்னரும்,உயிரும் மெய்யுமாகிய ஈற்றினையுடைய விளிப்பெயர் முன்னரும் வன்கணம்வரின் இயல்பு புணர்ச்சியாம்.எ-டு : உண்கா சாத்தா? அவனே கொண்டான்? உண்கோ சாத்தா? யா குறியன?நம்பீ கொள், விடலாய் சொல்(உண்கா – உண்பேனோ என்னும் பொருளையுடையது; ஆகாரஈற்று வினா) (நன்.160)உயிரும் ய ர ழ – மெய்களும் ஆகிய ஈற்றினையுடைய முன்னிலை வினையும்ஏவல்வினையும், வருமொழி முதல் வன்கணம் வரின் இயல்பாகவும் உறழ்ந்தும்புணரும்.எ-டு : உண்டி, உண்டனை, உண்டாய்+ கொற்றா = உண்டி கொற்றா – முதலாகஇயல்பாக முடிந்தன.உண்டீர் + கொற்றீர் = உண்டீர் கொற்றீர் – என இயல்பாகமுடிந்தது.முன்னிலைவினை முன்னர் வன்கணம் வந்து இயல் பாகமுடிந்தவாறு.வா கொற்றா, பாய் சாத்தா, சேர் தேவா, வாழ் புலவா – என, உயிர் ய ரழ இறுதி ஏவல்வினை முன் வன்கணம் வர இயல்பாயிற்றுநட கொற்றா, நடக் கொற்றா; எய் கொற்றா, எய்க் கொற்றா; ஈர் கொற்றா,ஈர்க் கொற்றா; தாழ் கொற்றா, தாழ்க் கொற்றா; – என, இவை உறழ்ச்சிமுடிபு.இயல்பாதல் முன்னிலைவினைக்கண்ணும், உறழ்தல் ஏவல் வினைசிலவற்றின்கண்ணும் கொள்ளப்படும். (நன். 161)