பொதுநோக்கு podunōkku, பெ. (n.)
1. எல்லாரையும் ஒப்ப நோக்குகை; impartial regard, as of a king.
‘பொதுநோக் கொழிமதீ புலவர் மாட்டே’ (புறநா. 121);
2. மாறுபாடான பார்வை; indifferent look.
‘எதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் (குறள்.1099
3. பகுத்தறிவு:
common sense.
‘எம்மி டத்தேயமைந்துள்ளஅறிவின் அகலத்தளவாகப் பொதுநோக்காக நோக்கி (பிரபஞ்சவி. 20);
[பொது + நோக்கு]