பொதுக் கருவி

தொல்காப்பிய எழுத்ததிகாரத்து முதல் மூன்று இயல்களாகிய நூல்மரபு,மொழிமரபு, பிறப்பியல் என்பன. முதலெழுத்து சார்பெழுத்து, மொழி முதலில்வருவன, இறுதியில் வருவன, நட்பெழுத்து, பகையெழுத்து, எழுத்துக்களின்தோற்றம்- இவை பற்றியே இம்மூன்று இயல்களும் கூறுகின்றன. இவை செய்கைக்குநேரான கருவி அன்மையின் பொதுக்கருவி ஆயின. (சூ. வி. பக். 17)