பொதி

பொதி podi, பெ.(n.)

   1. நிறைவு; fullness, perfection.

பொதித்தே னுகர்ந்தகலும் (தஞ்சைவா 290);

   2. மூட்டை; pack, bundle, load, as for a beast; parcel tied in a cloth.

     ‘கண்ணெழுத்துப்படுத்த….பொதி (சிலப்.5.12);

   3. பலபண்டம் (திவா);,

 miscellanceous goods.

   4. செல்வம். (திவா);

 treasuse.

   5. சொற்பயன், (திவா.);; meaning of a word.

   6, ஒரிவகை நிறையளவு; pack-load, a measure of weight varying with the locality.

   7, 3 அல்லது 4 கன அடியுள்ள நீர்மப் பொருளளவு வகை.

 a liquid measure of 3 or 4c ft

   8.2640 சதுரஅடிகொண்ட நிலவளவு வகை(M.M.);; a superficial measure of land, 2640, sqyards.

   9. பிணிப்பு

 tie, fastening.

     “மலர்ப்பொதிய விழ்த்து (காசிக.நாரத.5);

   10. கட்டுச்சோறு (பிங்.);; boiled rice tied up for a journey. viaticum.

   11. தொகுதி; collection.

     ‘பெய்கனைப் பொதிகளாலே வளர்ந்தது பிறந்தகோபம் (கம்பரா.நாகபா:114,);

   12. அரும்பு

 flower bud.

கமலப் பொதியினை நகுவன புணர்முலை (கம்பரா. நாட்44,

   13. கொத்து; cluster.

அம்பொதித்தோரை (மலைபடு.121);

   14. முளை; tender shoots, as of paddy.

     ‘பசும்பொதித் தேறல் (மலைபடு.463.);

   15. உடல்; body.

     ‘பொதியே சுமந்துழல்வீர் (தேவா.1154.9);.

   16. தவிடு (பிங்);; bran.

   17. கரிகாடு (பிங்.);; burnt jungle.

   18. மூங்கில் முதலியவற்றின் பட்டை; bark as of bamboos.

     ‘பையங்கழை பொதிகளைந் தன்ன(புறநா.253);

   19. குடையோலை (திவா.);.

 ola basket used as a cup in eating and drinking.

   20. ஆவு முதலியவற்றின் மடி(C.G);; vadder.

   21. பருமன்; stoutness.

ஆள்பொதியாயிருக் கிறான் (உ.வ.);

   22. ஒலைக்குடை (சது.);; umbrella made of palm leaves.

     [ பொது→ பொதி ]

வே.க. பக்.78