பொதிர்-த்தல்

பொதிர்-த்தல் podirddal, செ.குன்றாவி.

   1. குத்துதல்; to pierce (v.t.);

கழை பொதிப்பத் தேன் சொரிந்து ( சீவக. 2778);

   2. முரித்தல்; to break, break off.

கவண்கலான் வார்பணை பொதிர்த்தும் (தணிகைப்பு. நாட்டுப். 41);

 பொதிர்-த்தல் podirddal, செ.கு.வி. (v.i.)

பருத்தல்,

 to well, increase in size, became large.

     ‘பொதிர்த்த முலையிடை (பரிபா. 21, 25);

     [ பொதி→ பொதி→ பொதிர்தல்]