பொதிர்-தல் podirdal, செ.கு.வி. (v.i.)
1. வீங்குதல்; to swell.
புனைதார் பொர நொந்து பொதிர்ந்த வென’ (சீவக. 1380);
2. மிகுதல் (வின்.);,
to increase, abount (w);.
3. நடுங்குதல்; to tremble.
சிரம்பொதிந் தமர. ரஞ்ச (கம்பரா. பிரமாத் 13,);
4. அஞ்சுதல் (தி.வா.);
to be afraid.
[ பொதி → பொதிர் → பொதிர்தல்]