பார்க்க ஆவினன்குடி.
[‘பொதினி’ என்னும் சொல்லின் பொருளை ஆராய்ந்த அறிஞர், இளநீர் இளநி, பதநீர் பதனி என்றாற்போல, பொதிநீர் என்பதே பொதினி என்றானது என்கிறார். பொதினி மலை மரங்கள் நிறைந்து விளங்கினமையால் பழங்களும் நிறைந் திருந்தன. பழத்தில் பொதிந்த நீரையொட்டி இவ்வூர் பொதினி எனப்பட்டது என்றார். இக்கருத்து அவ்வளவு பொருத்த முடையதாகத் தோன்றவில்லை.