பொட்டு poṭṭu, பெ. (n.)
, நெற்றியிலிடும் வட்டக்குறி; round mark, red white or black worn on the forehead.
“பொட்டணியா னுதல் (திருக்கோ. 303);
2. பொன்னாற் செய்த ஒருவகைத்தாலி; gold ornament in the shape of small metal cups strung together and worn round the neck.
‘அரக்கியர் கட்டிய பொட்டுகள் தொட்டறுபட்டிடும் (இராமநா.சுந். 18.);
3. ஒருவகையணி,
a kind of jewel.
‘திருக்கைப்பொட்டு (S.I.I_ii 16.);
4. கன்னத்தின் மேற்பொருத்து; temple of the head.
5. சிறுமை; trifle.
பொட்டான வேர்களும் (இராமநா.);
6. வட்டவடிவான குறி; dot, spot, mark.
7. துளி; drop.
மழை ஒரு பொட்டுக்கூட விழவில்லை.
8. புழு
worm (பிங்);
9. பூச்சிவகை
moth.
பொட்டரித்த ஆடை
10. பொட்டுப்பூச்சி (வின்.); பார்க்க:
11. ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் புள்ளி; dot, representing one.
12, தகுதியின்றிப் பிறரை ஏமாற்றிப் பெறும் நன்மதிப்பு (வின்);; repute or esteem obtained by imposing on others.
13. நுழைவழி (வின்.);; hole or opening to creep through, as in a hedge.
தெ.க. பொட்டு
[பொள்+து= பொட்டு]
பொட்டு poṭṭu, பெ. (n.)
1. உழுந்து முதலி தவசங்களின் தோலோடு கூடிய சிறுதுக
chaft, husk with particles of grain.
2. பொ; dust.
குலக்கிரி பொட்டெழ திருப்பு. 74
3. பொடுகு; dan druff = அவந்தலை பொட்டெழுந்திருக்கிறது.
[பொற்று → பொட்டு]