பொட்டி

பொட்டி1 poṭṭittal, செ.கு.வி. (v.i.)

திறத்தல்:

 to open.

கடிதக்கட்டைப் பொட்டித்துப் பார்த்தான்.

     [பொள் → பொட்டு → பொட்டி]

 பொட்டி2 poṭṭi, பெ. (n.)

   விலைமகள்; prostitute.

     ‘பொட்டியாளாசை கொஞ்ச மட்டினிலே மாறாது. (கவிகுஞ்.3);

     [ பெட்டை → (பெட்டி);→ பொட்டி]

 பொட்டி3 poṭṭi, பெ. (n.)

   1. கதவுகளில் அமைந்த வேலை வகை;see polippu.

   2. பெட்டி; box.

     [பெட்டி→ பொட்டி]