பொடி

பொடி1 poḍittal, செ.குன்றாவி, (v.t.)

   1,துகளாக்குதல்; to pulverises reduce to dust or powder.

     ‘எழுமலை பொடித்த…. வள்ளிதுணைக் கேள்வன் (கல்லா 1.);

   2. கெடுத்தல்; to spoil. destroy.

அது கண்பொடித்த நாள் (கம்பரா. காட்சி. 28);

   3. தோற்றுவித்தல்; to produce.

 பொடி2 poḍittal, செ.கு.வி. (v.t.)

   1. அரும்புதல்; to spring up, shoot, rise.

     “முலை பொடியா’ (திருக்கோ. 104);

   2. தோன்றுதல்; to appear.

ஊன்றலைப் பொடித்தாங்கனைய செஞ்சூட்டின் (சீவக. 21.06);

   3. விளங்குதல்; to shine.

இரவி கோடி … பொடித்து (குடா. 5, 1.);

   4. வியர்ரும்புதல்; to bedew;

 to ooze out, as perspiration.

புள்ளிவியர் பொடிப் (பதினொ. திருவிடைம.16);.

   5. புளகித்தல்; to horplate.

     ‘பொடித்தன வுரோமராசியே (கம்பரா. உண்டாட்டு, 36.);

   6. பொடியாதல்; to be pulversed.

பூழையோடே பொடித்து (கம்பரா.

எதிர்கோ. 10.)

 பொடி3 poḍi, பெ. (n.)

   1. தூள்

     ‘வாசநறும் பொடி (பெருங்.மகத 17,160);

   2. புழுதி (பிங்.);.

 dust.

பொடியாடிக்கிடப்பதோ (சிலப் 19,481);

   3. பூந்தாது; pollen of flowers.

   4. மூக்குத்துள்; snut.

பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்தி (அருட்பா, vi. அவாவறு12);

   5. சொக்குப்பொடி (வின்.);:

 magical powder.

   6. மாழைகளைப் பற்ற வைக்கும் பொடி; solder metallic cement.

   7. சாம்பல்; ash.

     ‘பொடியழல் (கலித் 85.2);

   8. திருநீறு. (திவா.);.

 sacred ashes (மெய்சேர். பொடியர் (தேவா. 46.5);

   9. சிறிய துண்டு; anything small or minute, particle, fragment.

   10. சிறியது; that which is small.

   11. சிறுமணி (கொ.வ.);; small gem.

   12. சிறு பிள்ளை” (யாழ்ப்);; little child.