பொடி-தல் poḍidal, பெ. (n.)
செ.கு.வி.
1. தூளாதல்; to be broken to pieces, as rice, to become pulverised:
“சிரம்பொடிந்து சிந்தவே (கம்பரா. மூலபல. 93);
2. தீய்தல்; to be blighted, as grain.
“பொறாதார் தங்கண் பொடிவதெவன் (கலித்.105);
3. ஒளி மழுங்குதல்; to lose brightness.
‘கண்ணெலாம் பொடிந்தலற (தேவா. 805.8);
4. கெடுதல் (வின்.);; to perish, to be destroyed (w);.
5. சினங்கொள்ளுதல்; to be angry.
‘தன் கைகால் தப்புச் செய்ததென்று பொடிய விரகுண்டோ (திவ். திருப்பா. 28. உரை,பக்.244);