பொச்சை poccai, பெ, (n.)
1. காடு; forest copse.
“பொச்சையிடை.வெட்டுங்கொலை வேடர் (திருப்பு:7);
2. கரிகாடு (பிங்);; burnt jungle (பங்);
3. சிறுமலை (சூடா);; hillock.
4. மலை (திவா.);
hill mountain.
5.புழுக்கூடு.
nest of insects.
‘பொச்சையிற் கையிடாதே’ (வின்);
[பொற்றை→ பொச்சை]
பொச்சை poccai, பெ. (n.)
குற்றம்; fault.
“பொச்சையர் கடனணி பொருமல் கொள்வதே(கந்தர்.தருமகோ.19);
[பொச்சம் → பொச்சை]
பொச்சை poccai, பெ. (n.)
தொப்பை வயிறு,
paunch, pot-belly.
‘பொக்சையிட்டுப்பாந்தமாக வவன் வளர்ந்து (ஆதியூரவதானி.8);
தெ. பொட்ச. க. பொஜ்ஜெ