பொசி-தல் posidal, செ.கு.வி. (v.i.)
1. கசிதல்; to ooze out, percolate:
‘நெல்லுக் கிறைத்த நீர்…புல்லுக்கு மாங்கே பொசியுமாம். (மூதுரை.10);
2. வடிதல் (வின்);; to flow freely, as tears, milk, stream. (u.);
3. செய்தி வெளியாதல்;(பாரத. அருச்சுனன்றவ.40);
to leak out, as a report or secret.
4. மனமுருகுதல் (வின்.);; to melt, be softened as the heart in benevolence.
[பொசி → பொசி-தல்]