பொங்கு-தல்

பொங்கு-தல் poṅgudal, செ.கு.வி (v.i.)

   1. காய்ந்து கொதித்தல்; to boll up, bubble up by heat.

   2. கொந்தளித்தல்; to foam and rage, as the sea.

     “பொங்குநீர் ஞாலம்’ (நாலடி.72);.

   3. மிகுதல் (பங்);; to increase.

     ‘மகிழ்ச்சி பொங்கி (காசிக.சயிலே.23);

   4. பருத்தல்,

 to expand swell, as with joy.

     ‘வன் கொங்கை பொங்க (திருவாச.9.8);

   5. மேற்கிளர்தல்; to shoot up.

     ‘நெய்ம்மலி யாவுதி பொங்க (புறநா.15);

   6. ஊக்கம் கொள்ளுதல்; to be elated, spirited.

     ‘போர்த்தோழில் வேட்கை பூண்டு பொங்கினார்’ (கம்பரா. படைத்.1);

   7. வைகுளுதல்; to burust in anger.

     ‘பொங்கி, மறத்திடை மான மேற்கொண்டு (பு.வெ.5.6);

   8.செருக்குதல்; to be haughty.

     ‘பொங்குதல் லின்றிப் புரையோர் நாணிப்பண் (தொல்.பொ. 426);

   9. நுரைத்தெழுதல்; to ferment, effer vesce.

     “தோசைமா கள்ளு முதலியன பொங்கும்

   10. விளங்குதல்; to bebright, attractive.

     ‘பொங்குவெண்ணுலு பொடியணி மார்பிற் பொலிவித்து (தேவா.8762,

   11. மயிர் சிலிர்த்தல்; to stand on end as hair or mane.

     ‘எரிமயிர் பொங்க (திவ்.திருப்பா.23);

   12. வீங்குதல்; to be swollen as a boil or sore.

     ‘பதைத்தடி பொங்கு நங்காய் (திருக்கோ.228);

   13.விரைதல்; to be swift, rapid.

     ‘பொங்குநடை

….. விடையாமவரூர்தி (தேவா.535,2);

   14. துள்ளுதல்; to jump, leap.

     ‘ஏழை யிரும்புகர் பொங்க (கலித்.107);

   15. கண் சூடுகொள்ளுதல்,

 to be inflamed, as eyes.

   16.உயர்தல் (பிங்);,

 to rise, grow high.

   17. செழித்தல்; to a bound, flourish, to be fruitful.

   18,ஒலித்தல்,

 to sound, roar, to cook.

     ‘பொங்கின. சிலம்புகள் (கம்பரா.உண்டாட். 63);

தெ.க.பொங்கு. ம.பொங்குக.

     [பொங்கு → பொங்குதல்]