பொங்கல்

பொங்கல் poṅgal, பெ. (n.)

   1. பொங்குகை; bolling, bubbling, leaping.

   2. கடுஞ்சினம்; violent anger.

   3. மிளகு,சீரகம்,உப்பு,நெய் முதலியன கலந்து அட்ட பொங்கல்; a preparation of boiled rice Seasoned with salt, pepper, cumin seeds and ghee.

பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து

   4. ஞாயிறு கறவ வோரையிற் செல்லும் நாளான கறவ(தை);த்திங்கள் முதல் நாளன்று ஞாயிறுபோற்றி வழிபட்டு

   அதற்குப் பொங்கல் படையலிட்டுச் செய்யும் திருவிழா; solar festival, when the sun enters Carpricorn and Takes a northward course, being the first day of the month tai, when Pongal is prepared as an offering.

   5. உயர்ச்சி (சூடா);.

 height.

   6. பருமை; largeness.

     ‘பொங்கல் வெம்முலைகள் (சீவக.2805);

   7. மிகுதி (பிங்);

 fulness.excess.

   8. கள்; toddy.

பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து (சிலப்.69, அரும்);

   9. பொலிவு;(பிங்);

 bloom, splendour.

க. பொங்கலு

     [பொங்கு→பொங்கல்]