பொங்கற்பண்டிகை poṅgaṟpaṇṭigai, பெ (n.)
தமிழ் மக்கள் ஆண்டுதோறும் கறவ (தை); மாதம் முதல் நாளில் பொங்கலிட்டுக் கொண்டாடும் விழா; poñgal festival.
[பொங்கல் + பண்டிகை]
பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள். அறுவடையான பின், புதிரி என்னும் புது நெல்லைச் சமைத்து நன்றியறிவுடன் வழிபடு
தெய்வத்திற்குப் படைத்துண்பதே பொங்கல். நீர்வளம் மிகுந்த பங்களில் முப்பூ விளையும், (பூவென்பது வெள்ளாமை,); நீர் வளமில்லா இடங்களில்
மாரி நீர்த்தேக்கத்தால் ஒரு வெள்ளாமைதான் விளைக்க முடியும். ஆகவே, சிலை (மார்கழி); அல்லது கறவை (தை); மாத அறுவடையே நாடெங்கும்
நிகழும். ஆதலால், தைப்பொங்கல் பெரும் பொங்கல் எனப்பெறும்.
செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் சரி நீர் வைத்துச் சமைத்து, பருப்புக்குழம்புடன் உண்பது பொங்கல் மரபு. “பருப்புக்
கேட்கும் பச்சரிசிச் சோறு, செருப்புக் கேட்கும் சித்திரை மாத வெயில்” என்பது பழமொழி. பொங்கற் பானையில் உலை பொங்கி வந்தவுடன்
சிறிது வழிய விடுவது பொங்கல் அடையாளமாகக் கருதப் பெறும், இதுவே உழுதுண்டார் பொங்கல்.
அக்காரடலை (சருக்கரைப் பொங்கல்); அக்காரவடிசில் (சருக்கரை நெய்ப்பொங்கல்); நெய்ப்பொங்கல், மிளகுப்பொங்கல், வெண் பொங்கல்
முதலிய சுவைமிக்க பொங்கல் வகைகளெல்லாம் உழுவித் துண்பாரும் செல்வருமான பிறர் பொங்கல். பால் பொங்க வைப்பது இடையர்
பொங்கல். சல்லிக் கட்டென்றும் மஞ்சு விரட்டென்றும் மாடு விடுதல் என்றும் நடைபெற்றுவருவது பண்டை முல்லைநில வழக்கம் ஏறுதழுவல்).
திணை நிலைக் காலத்தில் உழவர் வழிபட்ட தெய்வம் விண்னோர் தலைவனான வேந்தன் இந்திரன்) திணைமயக்கம் ஏற்பட்ட பின்,
பாலை நிலத் தெய்வமான காளியும் நடுகல் தெய்வங்களும் வழிபடு தெய்வங் களாயின. சிவநெறியும் திருமால் நெறியுமான
பெருமதங்கள் தோன்றிய பின், உழுவித் துண்பார்தம் கொள்கைப்படி சிவனையோ திருமாலையோ வழிபட்டு வருகின்றனர்.
ஆங்கிலக் கல்வியினாலும், நயன்மை (நீதிக்கட்சி); ஆட்சியினாலும், தமிழரிடையே மறுமலர்ச்சி யுண்டாயிருப்பதால் பொங்கல்
பெருநாள் ஒரு நாட்டினத் திருநாளாகத் தமிழரனைவராலும் ஒருவகைப் புத்துணர்ச்சியு டன் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.
பிராமணர் பொங்கலைச் சங்கராந்தி என்பர். பொங்கல் உழவர்க்கே சிறப்பாக வுரிய பெரும் பண்டிகையாயினும் அரசியலாரும் உழவால் லா த பிற
பொது மக்களும் இப் பெருநாளைக் கொண்டாடி உழவரை ஊக்குவதுடன்;நன்றியறிவாகவும் தந்நலங் கருதியும், நிலமுள்ள ஏழையுழவர்க்குக் கடனடைக்கவும் குலவெருதுகள் வாங்கவும் பொருளுதவியும்,
பொறியியற் கருவிகள், நல்விதைகள், வல்லுரங்கள் முதலியன இலவசமாக வழங்கியும் நிலமில்லாத வழவர்க்கு அவற்றோடு நிலமும்
வழங்கியும் பெரு நிலக்கிழவரும் சிறுநிலக்கிழவரும் நிலமில்லா வழவருமாகிய முத்திறத்தார்க்கும் புதிய அறிவியல் முறைகளைக்
கற்பித்தும்: உழைப்பினால் பெருவிளைவு காட்டுபவர் பண்ணையாராயின் மிராசுதார் பட்டம் சின்னம் சலுகை முதலியவற்றாலும்
எளியவராயின் நன்கொடையினாலும் சிறப்பித்தும் சூத்திரன் என்னும் சிற்றிழிவையும் தீண்டாதான் என்னும் பேரிழிவையும் அடியோ
டகற்றியும் எதிர்கால வுழவராவது தாய்மொழிச் செய்தித்தாளைப் படித் துத் தம் அறி வைப் பெ ரு க் கி க் கொள்ளுமாறு இலவசக்
கட்டாயத் துவக்கக் கல்வியை விரைந்தேற்படுத்தியும் உணவுப் பொருள் விளைவுப் பெருக்க இயக்கத்தை ஓங்கச் செய்வாராக.
“பகடு நடந்த கூழ்” என்று நாலடியார் கூறியபடி, உழவுத் தொழிற்குதவும் எருது களையும், பிந்தி யுதவக்கூடிய கன்று களையும்,
பாலுணவளிக்கும் பெற்றங்களையும் (பசுக்களையும்); போதிய ஊட்டங் கொடுத்தும் மிகைவேலை வாங்காதும், நோய் மருத்துவஞ் செய்தும்,
உடையவர் பேணுமாறு கருத்தாய்க் கவனித்தும் பேணாதவரைத் தண்டித்தும்; கால்நடைப் பண்ணைகளை ஆங்காங்கு ஏற்படுத்தியும்;அரசியலார் உழவுத் தொழிலை ஊக்குவாராக. உழவர் வாழ்க! உழவெருதுகள் வாழ்க! -பாவாணர்