பொகுட்டு

பொகுட்டு poguṭṭu, பெ. (n.)

   1. கலங்கல் நீரில் எழும் குமிழி; bubble formed in turbit water.

     “திரை நுரைமென் பொகுட்டு. அரிவை” (பரிபா.11.27);

   2. தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை (நன்.387, மயிலை);

 pericarp of the lotus or common caung flower.

     “அரும்பொகுட் டனைத்தே யண்ணல் கோயில்” (பரிபா.பக்.174);

   3. மலை (கிங்);; mountain.