பை

பை pai,    தமிழ்நெடுங்கணக்கில் ‘ப்’ என்ற மெய்யும் ‘ஐ’ என்ற உயிரும் சேர்ந்து உருவான உயிர்மெய் எழுத்து; the compound of ‘ப்” and ‘ஜ’

     [ப் + ஐ = பை ]

 பை pai, பெ. (n.)

   1. பசுமை (பிங்);,

 greeness, freshness.

   2. நிறம் (வின்.);; colour.

   3. இளமை; youth.

     ‘பைதிர் பாணரொடு (மலைபடு.40);

   4. அழகு;(திவா.); ; beauty.

     ‘பைவண்ண மணிக்கூடந்தனில் (பாரத. கிருட்டிணன்.33);

   5. உடல்வலி; strength, vigour.

நும் பைதிர் கடும் பொடு (பெரும் பாண்.103);

     [பசு → (பசி); → (பயி);_யை → பை ] முதா. (பக்.45);

 பை1 paittal, செ.கு.வி. (v.i.)

   1. பசுமை யாதல்; to become green or greenish (சூடா.);

   2. விளங்குதல்; to look bright.

     ‘பைத்த சோத (தக்கயாகப்.467);

     [பசு → (பசி); → (பயி); → யை → யை ] முதா. (பக்.45);

 பை pai, பெ. (n.)

   1. துணிதோல் முதலியவற்றால் அமைந்த கொள்கலம்; sack, purse, satchel.

     “தோற்பையுணின்று —— கூத்தன் புறப்பட்டக் கால்” (நாலடி.26);

   2. பாம்புப்படம்; hood of a cobra.

     ‘அரவம்…..பைவிரித்தென. (மணிமே.20, 1054);

   3. சிறுநீர்ப்பை முதலிய உடலுள்ளுறுப்பு:

 bladder, duct, pouch, as in animal bodies.

   4. 500 அல்லது 1000 உரூபா. இரண்டு பை அந்தப் பாவலர் பெற்றார் (உ.வ.);

 பை2 paittal, பெ. (n.)

   1. விரித்தல்; to spread the hood, as a bobra.

     ‘பைத்த பாம்பின் நத்தி யேப்ப (பெருந.69);

   2. சினங்கொள்ளல்(பிங்.);; to be angry.

   3. பொங்குதல்; to be tumultuous, as the sea.

     ‘பைத்தாவத் திரை சிந்திய…. நித்திலம் (சீவக.1766);

   4. மிகுதல் (அக.நி.);; to be excessive.

     ‘பைத்தபல் பீடை (விநாயகபு.73,36);

     [பை → பை-த்தல்]