பையா-த்தல் paiyāttal, செ.கு.வி. (v.i.)
1. வருந்துதல்; to be distressed, to suffer pain.
‘அரவம் வைகிக் கேட்டுப் பையாந்திசினே’ (நற்.144);
2. அச்சந் தோற்றுதல் ; to show signs of fear.
‘பையாக்க விழிக்கத் தொடங்கினான்’ (ஈடு,5,10,3);.
[பை→ பையா → பையாத்தல்]