பைதல்

பைதல் paidal, பெ.(n.)

   1. இளையது; that which is young or small.

     “பைதல் வெண்பிறை (தேவா.628,5);

     ‘சிறுகிளிப் பைதலே (திவ்.திருவாய்,9.5.6);

   2. சிறுவன்; boy.

பைதலை யித்தனை பொழுது கொண் டிருப்பதோ (கம்பரா. பிணிவிட். 2);

   3. துன்பம்,

 sorrow, affliction.

பைதலுழபப் தெவன் (குறள்.1172);

   4. குளிர்; cold, chilliness.

     “பனிப்படு பைதல்” (பரிபா.11.75);

     [பை→பைதல்]