திருப்பைஞ்ஜீலி எனச் சுட்டப்படும் தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. மூவர் தேவாரமும் இத்தலத்திற்கு அமைகிறது. நீலி என் பதை வாழையென ரா.பி சேதுப்பிள்ளை பொருள் கொள்ள, கி. நாச்சிமுத்து அதனை மறுக்கிறார்.
அஞ்சுரும்பு அணிமலர் மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஜீலி மேவலான் (திருஞான-272-6) எனவும்,
தாழைத் தண்பொழில் சூழ்ந்த பைஞ்சீலி (திருநா-155-5) எனவும்,
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ் பைஞ் லியில் ஆரணீய விடங்கரே (சுந் – 36-2)
எனவும், பைஞ்ஜீலியின் இயற்கை நலம் விளக்கப்படக் காணலாம். எனவே இப்பெயரில் உள்ள பைம் பசுமையைக் குறித்து எழுந்த சொல் என்பது தெளிவாகிறது நீலி என்பதில் ஞ என்பது மொழி முதலில் வாராதது என்ற காரணம் காட்டி கி.நாச்சி முத்து இது வாழை அன்று என்பது காட்டுகிறார். இந்நிலையில் இது எந்த சொல்லின் திரிபாக இருக்கலாம் என்பது மேலும் ஆய்வுக்குரியது.