பேறு pēṟu, பெ. (n.)
1. பெறுகை,
receiving. obtaining.
‘மக்கட் பேறு (குறள்.61);
2.அடையத்தக்கது; anything worth obtaining.
விழுப்பேற்றி னஃதொப்ப தில்’ (குறள்,162);
3. ஊதியம் (பிங்.); :
profit, gain.
4. அருட்கொடை (வின்.);; boon, blessing.
5. நன்கொடை; gift, prize, reward.
6. பயன்; advantage, benefit, result.
7. தகுதி (வின்.);; worth, merit, desert.
8.மகப்பெறுகை; childbirth.
9. முகத்தலளவையில் ஒன்றைக் குறிக்கும் சொல்; term meaning ‘one’ in measuring Out grains. (தைலவ.தைல.);
10. புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு,
பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு வகைப்பட்ட செல்வம் (அபி.சிந்);; acquisition, of which there are 16, viz, pugal, kalvi, verri, nan-makkļ,
poŋ, nel,nallūl, nugarcci, arrivu, alagu, perumai, iļamai, tuņivu, nõy-iņmai, vālmā
11. செல்வம் (யாழ். அக.);; wealth.
12. நல்லூழ் (யாழ்.அக.);; good fortune.
13. நிலப்பயன்வகை (G.Tn.D.L189);; a kind of land tenure.
14. இரை; prey, food.
‘பேற்றொடாழ் புனன் மூழ்கியெழுந்திடும்புள்” (இரகு.திக்குவி.62);
[பெறு→ பேறு ]