பேரொளி pēroḷi, பெ. (n.)
1. மிகுந்த ஒளி,
great light, lustre.
“பேரொளியேசேர்வன” (திருவிருத்.14);
2. ஞாயிறு:
Sun.
3. திங்கள்,
moon.
“பேரொளியைக் கூடி யாவங் கொள்ளுநாள்” (சைவச பொது.13);
4. கடவுள்
god, as the supreme light.
“சித்தாந்தப் பேரொளியை,” (தாயு,பொருள்.2);
[பெரு → பேர்+ஒளி]