பேரூர்

பேரூர் pērūr, பெ. (n.)

   1. நகரம்; city.

     ‘காவலன் பேரூர் கனையெரி யூட்டிய (மணிமே.2,54);

   2. மருத நிலத்துர் (இறை.கள.1.19);; large town in an agricultural tract.

   3. கோயம்புத்துர் மாவட்டத்து அமைந்த சிவன் கோயில்; a siva shrine in coimbatore District.

கொகிற் காஞ்சிவாய்ப், பேரூர் (பெரியபு. ஏயர்கோன்.88);

     [பெரும் + ஊர்→ பேரூர்]