மேலைச் சிதம்பரம் என வழங்கப்படும் தலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது. நொய்யலாறு இதன் அருகில் உள்ளது. திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் (265-8) இதனைக் குறிப்பிடுகின்றார். பெரிய குடியிருப்புப் பகுதி என்ற நிலையில் இப்பெயர் அமைந்திருக்கலாம்.