பேராசிரியர்

தொல்காப்பிய உரையாசிரியர்; நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவர்.காலம் 13ஆம் நூற்றாண்டு என்ப. இவர் பொரு ளதிகாரத்தில்நச்சினார்க்கினியரால் மூன்று இடங்களில் போற்றப்பட்டுள்ளார்.மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு என்னும் பொருளதிகார நான்குஇயல்கட்கும் இவர் உரை உள்ளது. திருக்கோவையார் உரையாசிரியரொருவர்க்கும்பேராசிரியர் என்ற பெயர் உண்டு. இவ்விருவர் உரையும் திட்ப நுட்பம்வாய்ந்தவை; தமிழுக்குப் பெருமை கூட்டுவன.