பேரகத்தியம்

அகத்தியரால் இயற்றப்பட்டதோர் இலக்கணநூல்; அளவிற் பெரியதாயிருந்தமை‘சிற்றகத்தியம்’ என்ற பெயரை நோக்கப் புலனாம். இஃது இறந்துபட்டது. இஃதுஇயல் இசை நாடகம் என்ற முத்தமிழிலக்கணமும் கூறிய மகா பிண்டமாகஇருந்தது. (மா. அ. பாயிரம். 20)