பேன் என்ற பெயர் புணருமாறு

பேன் என்பது பண்டைக்கால இயற்பெயர்களுள் ஒன்று. பேன் என்ற இயற்பெயர்தந்தை என்ற முறைப்பெயராடும், மக்கள் முறைமையில் வரும்இயற்பெயர்களொடும் புணரும்வழி, இயற்பெயர்களுக்குரிய சிறப்புப்புணர்ச்சி விதி பெறாது, அஃறிணை விரவுப்பெயரின் பொதுவிதியான்முடியும்.எ-டு : பேன்+ தந்தை = பேன்றந்தை (பேனுக்குத் தந்தை)பேன் + கொற்றன் = பேன்கொற்றன் (பேன் என்ப வனுக்கு மகனாகியகொற்றன்) (தொ.எ.351 நச்.)