பேணு பெருந்துறை

இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமையும் ஊர். திருப்பந்துறை என்று வழங்கப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் துறை காரணமாகப் பெருந்துறை பெயர் பெற்றது. கோயில் காரணமாகப் பெருந்துறை எனச்சுட்டப்பட்டிருக்கலாம். மேலும் பிற பெருந்துறை,யினின்றும் தனித்துச் சுட்ட, சம்பந்தர் பாடலடியான பேணு பெருந்துறை என்பதில் உள்ள பேணு’ என்ற அடையை இணைத்திருக்கலாம்.
பெம்மான் நல்கிய தொல்புகழாளர்
பேணு பெருந்துறையாரே (42-1)
அரிசில் நதிக்கரைப் பக்கத்து இது அமைந்திருந்த நிலை,
தழையார் மாவின் றாழ்கனி யுந்தித் தண்ணரிசில் புடை சூழ்ந்து
குழையார் சோலை மென்னடையன்னம் கூடும் பெருந் துறையாரே (திருஞான 42-7)
என்பதில் புலப்படுகிறது.