பெரும்புலியூர்

திருப்பெரும்புலியூர் என்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமையும் ஊர் இது. வியாக்கிர பாதர் (புலிக்கால் முனிலர்) வழிபட்ட தலமாகும் சம்பந்தர் பாடல் அமைந்த இவ்வூர் பற்றிய செய்திகள் தெளிவாகவில்லை. எனினும், திருவையாற்றிற்குப் பக்கத்தில் காவிரியின் வடகரையில் உள்ளது என்பது மட்டும் தெரிகிறது.