பெருமங்கலம்

சேக்கிழார் ஏயர்கோன் நாயனார் வரலாற்றில்,
நீடு வண்புகழ்ச் சோழர் நீர் நாட்டிடை நிலவும்
மாடு பொன் கொழி காவிரி வடகரைக் கீழ்ப்பால்
ஆடு பூங்கொடி மாட நீடிய அணிநகர் தான்
பீடு தங்கிய திருபெருமங்கலப் பெயர்த்தால் (1)’
என அவரது பிறந்த நாடு பற்றி பேசுகின்றார். இப்பாடலினின்றும் இது சோழநாட்டு, காவிரியின் வடகரைத் தலம் என்பதும். அன்று மிகவும் செழிப்புடன் சிறந்த குடியிருப்புப் பகுதியாக விளங்கியது என்பதும் தெரிகிறது.