நில அமைப்பால் பெயர் பெற்ற ஊராக இருக்கலாம். பெருங் குன்றில் அமைந்த ஊர் பெருங்குன்றூர் ஆயிற்று போலும், கிழார் என்னும் சங்ககாலப் புலவர் இவ்வூரினர். ஆகவே பெருங்குன்றூர் கிழார் எனப் பெயர் பெற்றிருத்தார். பதிற்றுப் பத்தில் ஒன்பதாம் பத்தையும், குறுந்தொகையில் 338. ஆம் பாடலையும், புறநானூற்றில் 147, 210, 211, 26,318 ஆகிய பாடல்களும் பாடிய கிழார் என்னும் புலவர் இவ்வூரினராகிய பெருங்குன்றூர் கிழாரே.