பெயர் புணர்நிலை – பெயர்ச்சொல் இணையும்வழி. பெயர்ச் சொல் புணரும்வழியிலேயே வேற்றுமைப் புணர்ச்சி அமையும். நால்வகைச் சொற்களும்இருவழியும் புணரும் என எய்தியதனை மறுத்துப் பெயர்ச்சொல் புணரும்நிலையே வேற்றுமையாம் எனவே, வினைச்சொல் முதலியமூன்றும் புணரும்வழிஅல்வழிய ஆவன அன்றி, வேற்றுமை வழிய வாரா;பெயர்ச்சொற்கள், வேற்றுமைவழி -அல்வழி – என இருவழியும் ஆம் என்பது. (சூ. வி. பக். 51)எ-டு :சாத்தன் மகன்-பெயரொடு பெயர்-வேற்றுமைப் புணர்ச்சிநிலம் கடந்தான்-பெயரொடு வினை – வேற்றுமைப் புணர்ச்சிவந்த சாத்தன்-வினையொடு பெயர் -அல்வழிப்புணர்ச்சிமற்றிலது-இடையொடு வினை – அல்வழிப்புணர்ச்சிநனிபேதை- உரியொடு பெயர் – அல்வழிப்புணர்ச்சிதவச்சேயது-உரியொடு வினை – அல்வழிப்புணர்ச்சிமற்றைப் பொருள்- இடையொடு பெயர்- அல்வழிப் புணர்ச்சிநால்வகைப் புணர்ச்சியும் வேற்றுமை அல்வழி என இரண் டாய் அடக்கலின்,வினைவழியும் உருபு வரும் என்பதுபட நின்றதனை இது விலக்கிற்று. (தொ. எ.117 இள. உரை)“ஆயின் இவ்விலக்குதல் ‘வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது’ என்றவினையியல் முதல் சூத்திரத்தான் பெறுதும் எனின், அது முதனிலையைக்கூறியதாம்.” (தொ. எ. 116 நச். உரை)