வானவன், மீனவன், வில்லவன், எல்லவன், கதிரவன், சூரியவன் – என்பன அகரஇடைநிலை பெற்றன.சேரமான், கட்டிமான் – என்பன மகர இடைநிலை பெற்றன.வலைச்சி, புலைச்சி – என்பன சகர இடைநிலை பெற்றன.புலைத்தி, வண்ணாத்தி – என்பன தகர இடைநிலை பெற்றன.வெள்ளாட்டி, மலையாட்டி – என்பன டகர இடைநிலை பெற்றன.கணக்கிச்சி, தச்சிச்சி- என்பன ‘இச்’ இடைநிலை பெற்றன.சந்தி வகையானும் பொதுச்சாரியை வகையானும் முடியாவழி இவ்வாறு வருவனஇடைநிலை எனக் கொள்க. (நன். 140 மயிலை.)அறிஞன் என்பது ஞகர இடைநிலை பெற்றது.ஓதுவான், பாடுவான் – என்பன வகர இடைநிலை பெற்றன.வலைச்சி, புலைச்சி – என்பன சகர இடைநிலை பெற்றன.வண்ணாத்தி, பாணத்தி; மலையாட்டி, வெள்ளாட்டி; தந்தை, எந்தை, நுந்தை-என்பன தகர இடைநிலை பெற்றன. (நன். 141 சங்கர.)அறிஞன், வினைஞன், கவிஞன் – ஞகரஒற்று இடைநிலை பெற்றன.ஓதுவான், பாடுவான் – வகரஒற்று இடைநிலை பெற்றன.வலைச்சி, இடைச்சி – சகரஒற்று இடைநிலை பெற்றன.செட்டிச்சி, தச்சிச்சி – ‘இச்சு’ என்னும் இடைநிலை பெற்றன.கதிரவன், எல்லவன், வானவன் – அகர உயிராம் இடைநிலை பெற்றன.சேரமான், கோமான், வடமன் – மகரஒற்று இடைநிலை பெற்றன. (நன். 141இராமா.)உண்டவன் உரைத்தவன் உண்ணாநின்றவன் உண்பவன் – முதலிய வினைப்பெயர்கள்முக்கால இடைநிலைகள் (ட், த், ஆநின்று, ப் முதலிய) பெற்றவாறும், வானவன்மீனவன் வில்லவன் எல்லவன் கதிரவன் கரியவன்-முதலியவை‘அ’ என்னும் இடைநிலைபெற்றவாறும், சேரமான் கட்டிமான்-முதலியவை மகர இடைநிலை பெற்றவாறும்,வலைச்சி பனத்தி மலையாட்டி முதலியவை முறையே சகர தகர டகர இடை நிலைபெற்றவாறும், செட்டிச்சி, தச்சிச்சி – முதலியவை ‘இச்சு’ என்னும்இடைநிலை பெற்றவாறும் காண்க. பிறவும் அன்ன. (இ. வி. 52. உரை)