பெண்பாற்பெயர்ப் பகுபதம் முடிப்புழி இன்ன குலத்தார் என்னும்பொருண்மை தோன்ற முடிக்க.அரசி என்னும் பகுபதம் முடியுமாறு: ‘தத்தம்….. பகுதியாகும்’ (நன்.133) என்பதனான் அரசு என்னும் பகுதியைத் தந்து, ‘அன் ஆன்’ (139)என்பதனான் இகர விகுதியை நிறுவி, ‘உயிர்வரின் உக்குறள்’ (163)என்பதனான் உகரத்தைக் கெடுத்துச் சகர ஒற்றின்மேல் ‘உடல்மேல்’ (203)என்பதனான் இகரஉயிரை ஏற்றி முடிக்க.பார்ப்பனி: ‘தத்தம்… பகுதியாகும்’ என்பதனான் பார்ப்பான் என்னும்பகுதியை முதல்வைத்து, அதனை ‘விளம்பிய பகுதி’ (138) என்பத னான்பார்ப்பன்- என அன் ஈறாக்கி, ‘அன் ஆன்’ என்பதனான் இகர விகுதியைக்கொணர்ந்து உயிரேற்றி முடிக்க.வாணிச்சி: வாணிகன் என்னும் பகுதியை ‘விளம்பிய பகுதி’ என்பதனான்‘கன்’ கெடுத்து, இகரவிகுதியைக் கொணர்ந்து சகர இடைநிலையை வருவித்துஅதனைமிகுவித்து, உயிரேற்றி முடிக்க.உழத்தி: உழவன் என்னும் பகுதியை ‘விளம்பிய பகுதி’ என்பத னான்‘வன்’கெடுத்து, இகர விகுதி கொணர்ந்து, ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம்இயம்பலின்’ (140) என்பதனான் தகர இடைநிலையை வருவித்து, அதனைமிகுவித்து, உயிரேற்றி முடிக்க.தச்சிச்சி: தச்சன் என்னும் பகுதியை ‘அன்’ கெடுத்து நிறுவி, இகரவிகுதியைக் கொணர்ந்து ‘இலக்கியம் கண்டதற்கு’ என்பதனான் ‘இச்’ என்னும்இடைநிலையை வருவித்து உயிரேற்றி முடிக்க. (நன். 144 மயிலை.)