பூ : புணருமாறு

மலரை உணர்த்தும் பூ என்ற சொல் அல்வழிக்கண் வன்கணம் வரின் மிக்கும்,ஏனைய கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும். வேற்றுமைக்கண் வருமொழிவன்கணம் வரின் வல்லெழுத்து மிகுதலும் இனமெல்லெழுத்து மிகுதலும்உரித்து.எ-டு: பூக்கடிது; பூ நன்று, பூவறிது, பூ வழகியது (வகரம்உடம்படுமெய்); பூக்கொடி, பூங்கொடி (தொ. எ. 264, 268நச்.)