பூ என்ற பெயர் நிலைமொழியாக நிற்க, வல்லினம் வருமொழி முதற்கண்நிகழுமாயின், இடையே வல்லெழுத்து மிகுதலே யன்றி அதற்கு இனமானமெல்லெழுத்தும் மிகும்.எ-டு : பூ + கொடி, சோலை, தடம், பொழில் = பூக்கொடி, பூங்கொடி;பூச்சோலை, பூஞ்சோலை; பூத்தடம், பூந்தடம்; பூப்பொழில்,பூம்பொழில்.வன்மைமென்மை மிகுதல் செவியின்பம் நோக்கிக் கொள்க. பூத்தொழில்,பூத்தொடை எனவும், பூம்பொழில் எனவும் வழங்குதல் காண்க. (நன். 200சங்.)