பூல் என்ற மரப்பெயர் அல்வழிக்கண் வன்கணம் வரின் உறழ்ந்தும், இடைஉயிர்க்கணங்கள் வரின் இயல்பாகவும் புணரும்.வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் அம்முச் சாரியையும் சிறுபான்மைஆம்சாரியையும் பெற்றுப் புணரும். மென்கணத்துள்ளும் ஞகரமகரங்கள் வருவழிலகரம் னகரமாய்த் திரியும் என்க.எ-டு : பூல்கடிது, பூற்கடிது – பூல்(ன்) ஞான்றது, பூல் வலிது,பூலழகிது – அல்வழி; பூலங்கோடு, பூலஞெரி, பூல விறகு; பூலாங்கோடு,பூலாங்கழி – வேற்றுமை. (தொ. எ. 368, 375 நச். உரை)