பூதி முதலியவற்றில் தீட்டியவரிவடிவு

‘புள்ளிவிட் டவ்வொடு’ என்னும்சூத்திரத்தில் வரிவடிவு ஒலிவடிவுஎன்னும் எழுத்தின் இருதிறனும் விரவிக் கூறினார், திருநீறுமுதலியவற்றில் தீட்டிய வரிவடிவம் ஒலிவடிவு போலப் பயன் தரும் ஒற்றுமைகுறித்து.புள்ளிவிட்டு அவ்வொடு முன் உருவாதல், ஏனை உயிரோடு உருவு திரிதல்,உயிரின் வடிவொழித்தல் – வரி வடிவம்;உயிர் அளவாதல், ஒற்று முன்னாய் ஒலித்தல் – ஒலிவடிவம் (நன். 89சங்கர.)