பூண்டி

குடியிருப்பிடம் “பூண்டி” எனப்படுகிறது. “சூழ்ந்து கொள்ளுதல்” என்னும் வினையடிப்படையில் இச்சொல் தோன்றியிருக்கிறது.[25] கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் “பூண்டி” என்ற வழக்கு இருந்திருப்பதை, “முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் பூண்டி” என்னும் சுந்தரரின் பாடலடிகள் உணர்த்துகின்றன.[26] சிற்றூர்களைக் குறிப்பிடும் பல சொற்களில் பூண்டி என்பதுவும் ஒன்றெனச் சூடாமணி நிகண்டும் சேந்தன் திவாகரமும் குறிப்பிடுகின்றன. [27]
பொதுக்கூற்று வடிவமாக மட்டுமின்றித் தனி ஊர்ப்பெயராகவும் “பூண்டி” வழங்குகின்றது.