பூஞ்சாற்றூர்‌

பூஞ்சாற்றூர்‌ என்னும்‌ பெயருடைய இவ்வூர்‌ சோழநாட்டில்‌ முடி கொண்டான்‌ ஆற்றங்கரையில்‌ உளதென்பர்‌. சாறு என்றால்‌ விழா என்று பொருள்‌ உள்ளது. ஒருவேளை விழாக்கள்‌ நிறைந்த ஊர்‌ என்னும்‌ பொருளில்‌ விழாக்கள்‌ கொண்டாடப்‌ பெறும்‌ ஊர்‌ என்னும்‌ பொருளில்‌ சாற்றூர்‌ எனப்‌ பெயர்‌ பெற்று பூம்‌ என்ற முன்‌ ஒட்டுடன்‌ இணைந்து பூஞ்‌ சாற்றூர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. கெளணியன்‌ விண்ணந்தாயன்‌ என்னும்‌ அந்தணன்‌ பூஞ்சாற்றூரைச்‌ சார்ந்தவன்‌. இவனை ஆவூர்‌ மூலங்கிழார்‌ பாடியுள்ளார்‌.