புள்: புணருமாறு

பறவையை உணர்த்தும் புள் என்ற பொருட்பெயர் இருவழி யும் வன்கணம்வந்துழித் தொழிற்பெயர் போல உகரமும் வல்லெழுத்தும் பெறுவதுபெரும்பான்மை; மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரப் பேறும்,யகரம் வரின் இயல்பும், உயிர் வரின் ளகரஒற்று இரட்டுதலும்எய்தலாம்.எ-டு : புள்ளுக் கடிது, புள்ளுக்கடுமை; புள்ளு ஞான்றது,புள்ளுஞாற்சி; புள்ளு வலிது, புள்ளுவலிமை; புள் யாது, புள்யாப்பு;புள்ளரிது, புள்ளருமை.புள் என்பதன் ளகரம் வன்கணம் வந்துழி டகரமாகவும், மென்கணம்வந்துழி ணகரமாகவும் திரிதலுமுண்டு.எ-டு : புட் கடிது, புட்கடுமை; புண் ஞான்றது, புண்ஞாற்சி. புள்என்பதன்முன் இடைக்கணம் வருமொழியா யின் உகரம் பெற்றும் பெறாதும்புணரும்.எ-டு : புள்ளு வலிது, புள்ளு வலிமை; புள் வலிது, புள் வலிமை(தொ. எ. 403 நச்.)