புள், வள் – என்பன தொழிற்பெயர் போல யகரம் அல்லாத மெய்ம்முதல்மொழிவருமிடத்தே உகரச்சாரியை பெறுதலு முண்டு; பொதுவிதிப்படி அல்வழியில்ஈற்று ளகரம் டகரத் தோடு உறழ்ந்து வருதல் மிகுதி; வேற்றுமையில் ளகரம்டகரமாகத் திரிதலே மிகுதி என்க.புள் + கடிது = புள் கடிது, புட் கடிது, புள்ளுக் கடிது -அல்வழிபுள் + கடுமை = புட்கடுமை, புள்ளுக்கடுமை – வேற்றுமைவள் + கடிது = வள் கடிது, வட் கடிது, வள்ளுக் கடிது -அல்வழிவள் + கடுமை = வட்கடுமை, வள்ளுக்கடுமை – வேற்றுமை புண் மெலிது,புண்மென்மை; புள் வலிது, புள்வலிமை – என ஏனைக்கணத்தொடும் புணர்த்துமுடிக்க. (நன். 234)