புள்ளி மயங்கியல்

புள்ளி மயங்கியல் தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் எட்டாவதுஇயலாகும். இது 110 நுற்பாக்களை உடையது.ஞகார ஈற்று அல்வழி வேற்றுமைப் புணர்ச்சி; நகார ஈற்று அல்வழிவேற்றுமைப் புணர்ச்சி; ணகார ஈற்று அல்வழி வேற்றுமைப் புணர்ச்சி; மகாரஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; னகார ஈற்று வேற்றுமை அல்வழிப்புணர்ச்சி; யகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ரகார ஈற்றுவேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; லகாரஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி;வகாரஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ழகார ஈற்று வேற்றுமை அல்வழிப்புணர்ச்சி; ளகார ஈற்று வேற்றுமை அல்வழிப் புணர்ச்சி; ஓத்தின் புறனடை -என்பன இதன்கண் அடங்கியுள. இப் புறனடை சிங்கநோக்காக முன்னுள்ள உயிர்மயங்கியலுக்கும் பின்னுள்ள குற்றியலுகரப் புணரியலுக்கும் ஒக்கும்.(தொ.எ.296- 405 நச்.)